ஆப்பிள் நிறுவனத்தின் கையிருப்பு பணம், அமெரிக்கவின் இருப்பை விட அதிகம்!

ஆப்பிள் நிறுவனத்தின் கையிருப்பு பணம், அமெரிக்கவின் இருப்பை விட அதிகம்!

அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளிடம் உள்ள கையிருப்பு பணம், அமெரிக்க அரசின் கையிருப்பு  பணத்தினை விட அதிகம் என செய்திகள் தெரிவிக்கின்றன.
 ஆப்பிள் நிறுவனத்திடம் 75.87 பில்லியன்  டாலர் பண  இருப்பு உள்ளது. ஆனால் அமெரிக்க அரசின் கருவூலத்தில் 73.76 பில்லியன் டாலர் மட்டுமே பண இருப்பு உள்ளது. அமெரிக்க அரசு தனது கடன் உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்று குடியரசு, ஜனநாயக கட்சிகள் கோரிவருவதற்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்காவின் கருவூலம் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.  அமெரிக்க அரசிடம் உள்ள மொத்த பண இருப்பு இந்த அளவிற்குத்தான் என்பதால் கடன் உச்ச வரம்பை உயர்த்த முடியாது என்று பதிலளித்துள்ளது. 
அமெரிக்க அரசிற்கு தற்போது 14.3 டிரில்லியன் டாலர் உள்ளது. இதற்கு மேலும் கடன் வாங்கினால் அது அமெரிக்காவின் பொருளாதாரத்தை பாதித்துவிடும் என்று அமெரிக்க கருவூலம் கூறியுள்ளது. சந்தை மூலதனமாக 363.25 பில்லியன் கொண்டுள்ள ஆப்பிள் அமெரிக்காவின் மிகப் பெரும் எண்ணெய் நிறுவனமான எக்ஸான் மொபில் நிறுவனத்திற்கு அடுத்தப்படியாக மிகப் பெரிய நிறுவனமாகத் திகழ்கிறது. 3ஜி அலைபேசி வர்த்தகத்தில் அடியெடுத்து வைத்த பிறகு அதன் வளர்ச்சி அபரீதமான அளவிற்குச் சென்றுள்ளது.

0 Response to "ஆப்பிள் நிறுவனத்தின் கையிருப்பு பணம், அமெரிக்கவின் இருப்பை விட அதிகம்!"

Post a Comment

Powered by Blogger